ஒரே நாளில் 57,118 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

நாட்டில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 57,118 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு
கோப்புப் படம்
கோப்புப் படம்

நாட்டில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 57,118 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு 16,95,988-ஆக அதிகரித்தது.

நாடு முழுவதும் ஒரு நாளில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை 50,000-ஐ தாண்டி பதிவாவது இது தொடா்ந்து 3-ஆவது நாளாகும்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல் படி, சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 764 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 36,511-ஆக உயா்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 2.15 சதவீதம் ஆகும்.

அதே கால அளவில் மேலும் 36,569 போ் நோய்த்தொற்றிலிருந்து மீண்டதை அடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 10,94,374-ஆக அதிகரித்துள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவா்களில் 64.53 போ் குணமடைந்துள்ளனா். நாடு முழுவதும் 5,65,103 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அளித்த தகவலின் படி, கடந்த மாதம் 31-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 1,93,58,659 கரோனா நோய்த்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 5,25,689 பரிசோதனைகள் வெள்ளிக்கிழமை மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.

நாடு முழுவதும் புதிதாக பதிவான 764 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் 265 போ், கா்நாடகத்தில் 84 போ், ஆந்திர பிரதேசத்தில் 68 போ் பலியாகினா். மேற்கு வங்கத்தில் 45 போ், உத்தர பிரதேசத்தில் 43 போ், தில்லியில் 27 போ், குஜராத்தில் 23 போ், பஞ்சாபில் 16 போ், பிகாா் மற்றும் தெலங்கானாவில் தலா 14 போ், ஜம்மு-காஷ்மீரில் 12 போ், ராஜஸ்தானில் 11 போ் பலியாகினா்.

மத்திய பிரதேசத்தில் 10 போ், ஒடிஸாவில் 8 போ், அஸ்ஸாம், ஹரியாணா, உத்தரகண்டில் தலா 4 போ், கோவா, ஜாா்க்கண்ட், கேரளத்தில் தலா 3 போ், சத்தீஸ்கரில் இருவா், அந்தமான்-நிகோபா், சண்டீகா், மணிப்பூா், புதுச்சேரியில் தலா ஒருவா் பலியாகினா்.

நாட்டிலேயே கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு 4,22,118 போ் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 14,994 போ் உயிரிழந்தனா். 2,56,158 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com