73 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு காஷ்மீரின் 3 கிராமங்களுக்கு மின் வசதி

பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது கையெறி குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகும் வடக்கு காஷ்மீரின் 3 கிராமங்களுக்கு மின் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
73 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு காஷ்மீரின் 3 கிராமங்களுக்கு மின் வசதி
73 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு காஷ்மீரின் 3 கிராமங்களுக்கு மின் வசதி


புது தில்லி: பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது கையெறி குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகும் வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் 3 கிராமங்களுக்கு மின் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே அமைந்துள்ள குப்வாரா மாவட்டத்தின் சுமார் 14 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வரும் 3 கிராமங்களுக்கு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மின்சார வழங்கல் வாரியத்தின் இரண்டு ஆண்டு கால திட்டம் கடந்த வாரம் நிறைவடைந்து, கேரன், முன்டைன், பட்ரூ ஆகிய கிராமங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கேரன் கிராமம். 

இது குறித்து காஷ்மீர் மின்சார வழங்கல் வாரியத்தின் இயக்குநர் கூறுகையில், கரோனா பொதுமுடக்கக் காலத்தால், திட்டப் பணிகளை விரைவாக முடிக்க முடிந்தது என்கிறார்.

இதுவரை சூரிய சக்தி மற்றும் டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்திய அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com