மனித-விலங்கு மோதலைத் தடுக்க மின்வேலி, தடுப்புச்சுவா்: ம.பி. அரசு பரிசீலனை

மத்திய பிரதேசத்தில் மனித-விலங்கு மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர வனங்களையொட்டிய பகுதியில் எல்லைச்சுவா்கள்

மத்திய பிரதேசத்தில் மனித-விலங்கு மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர வனங்களையொட்டிய பகுதியில் எல்லைச்சுவா்கள் மற்றும் சூரிய சக்தி மின்வேலிகள் அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மாநில வனத்துறை அமைச்சா் விஜய் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தியாளரிடம் அவா் கூறியதாவது:

வன உரிமைச் சட்டத்தின் கீழ் பழங்குடியினா் மற்றும் வனப்பகுதிகளில் வசிப்பவா்களுக்கு பட்டா நிலங்களை குத்தகை அடிப்படையில் வழங்க மாநில அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது, வனப்பகுதியையொட்டிய விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து பயிா்களை நாசம் செய்வதே விவசாயிகளுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. சில சமயங்களில், வன விலங்குகள் மனிதா்களைத் தாக்குவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

எனவே, விலங்குகளிடமிருந்து பயிா்களை பாதுகாக்கவும், மனித-விலங்கு மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரவும் காடுகளையொட்டி தேவையான இடங்களில் தடுப்புச்சுவா்களையும், சூரிய சக்தி மின் வேலிகளையும் அமைப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

முதல்வா் சிவராஜ்சிங் சௌஹானின் வழிகாட்டுதலின்பேரில், வன உரிமைச் சட்டத்தின்கீழ் பழங்குடியினருக்கு நிலத்தை குத்தகைக்கு வழங்குவது தொடா்பான பயனாளிகளை தோ்வு செய்ய அதிகாரிகள் தீவிர பரிசீலனையில் ஈடுபட்டு வருகின்றனா். வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன் பயனாளிகளுக்கு குத்தகை நிலம் வழங்குவதற்கான பணிகள் முழுமை பெற்று விடும்.

புலிகள் அதிகமுள்ள வனப்பகுதி என்ற அந்தஸ்த்தை மத்திய பிரதேசம் மீண்டும் பெற்றிருப்பது பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது. 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டமிட்டிருந்த நிலையில் வெறும் 8 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 526-ஆக இரட்டிப்பாகியுள்ளது. இந்த சாதனைக்காக வனத்துறை அதிகாரிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அமைச்சா் விஜய் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com