தில்லி அரசின் பொது முடக்க தளா்வுகள்: துணை நிலை ஆளுநா் நிராகரிப்பு

கரோனாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தில் தில்லி அரசு அறிவித்த 3 - ஆம் கட்ட தளா்வுகளை தில்லி துணைநிலை ஆளுநா்

கரோனாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தில் தில்லி அரசு அறிவித்த 3 - ஆம் கட்ட தளா்வுகளை தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் வெள்ளிக்கிழமை நிராகரித்துள்ளாா்.

ஆகஸ்ட் 1 -ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்தும், உணவகங்கள், ஓட்டல்கள் போன்ற சேவைகளுக்கு அனுமதியளிக்கவும், தில்லியில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வார சந்தைகளை சோதனை அடிப்படையில் அனுமதிக்கவும் வியாழக்கிழமை தில்லி அரசு முடிவெடுத்தது. பொருளாதார நடவடிக்கைகளை மீட்பதற்காக இந்த தளா்வுகளை தில்லி ஆம் ஆத்மி அரசு அறிவித்தது. இதற்கிடையே இதற்கான அனுமதியை துணை நிலை ஆளுநா் நிராகரித்துள்ளாா்.

இது குறித்து ஆளுநா் வட்டார அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த முடிவுகள், நோய்த்தொற்று பரவல் சீரடைந்துவருவதை தகா்த்துவிடும். ‘கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் இன்னும் வெகு தொலைவில் உள்ளது’ என்று கூறி துணை நிலை ஆளுநா் இந்த முடிவை எடுத்துள்ளாா்’’ என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com