ஜிஎஸ்டிவரி வசூல்
ஜிஎஸ்டிவரி வசூல்

ஊரடங்கில் தொழில்துறை முடக்கத்தால் ஜூலை மாதத்தில் 14% ஜி.எஸ்.டி வீழ்ச்சி

கரோனா வைரஸ் காரணமாக ஜூலை மாதத்தில் 14% ஜி.எஸ்.டி வீழ்ச்சி

புதுதில்லி: கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜூலை மாதத்தில் 14% ஜி.எஸ்.டி வீழ்ச்சியடைந்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் மந்தநிலையை அடைந்துள்ளது.

இதனால் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் 14% ஜி.எஸ்.டி வீழ்ச்சியடைந்து  87 கோடியே 422 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. 

சேகரிக்கப்பட்ட மொத்த ஜி.எஸ்.டி வருவாயில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி 16 கோடியே 147 லட்சமாகவும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி 21 கோடியே 418 லட்சமாகவும், இறக்குமதி வரி (20 கோடியே 324 லட்சம் ) உட்பட ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி 42 கோடியே 592 லட்சமாகவும் உள்ளது.

எனினும் கடந்த மாதத்திற்கான வருவாய் நடப்பு மாதத்தை விட அதிகமாக இருந்தது. இருப்பினும், முந்தைய மாதத்தில், ஏராளமான வரி செலுத்துவோர் நடப்பாண்டின் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் தொடர்பான வரிகளை செலுத்தியதே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com