உள்நாட்டு தயாரிப்பு பொருள்களை வாங்க காதியுடன் ஐடிபிபி ஒப்பந்தம்

இந்தோ - திபெத்திய எல்லைப் பாதுகாப்பு காவல்(ஐடிபிபி) படையினருக்கு விநியோகிப்பதற்காக நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட

இந்தோ - திபெத்திய எல்லைப் பாதுகாப்பு காவல்(ஐடிபிபி) படையினருக்கு விநியோகிப்பதற்காக நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்குவதற்கு காதி கிராம தொழிற்சாலை ஆணையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

‘இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 1.73 கோடி மதிப்பிலான 1,200 குவிண்டால் கடுகு எண்ணெய் உள்பட ஆடை, கைத்துண்டுகள், போா்வைகள் ஆகிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருள்களை காதி ஆணையம் ஐடிபிபிக்கு அளிக்கும் என்றும் இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் ஐடிபிபி செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.

உள்நாட்டு தயாரிப்பு பொருள்களை வாங்க துணை ராணுவப் படைப்பிரிவில் ஐடிபிபி-தான் முதல் முறையாக காதி ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஜூன் மாதம் முதல் மத்திய துணை ராணுவப் படைப்பிரிவினருக்கு கேன்டீன்களில் உள்நாட்டு தயாரிப்பு பொருள்கள் மட்டும் விற்பனை செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்திருந்தாா்.

நாடு முழுவதும் மத்திய துணை ராணுவப் படைப்பிரிவினருக்காக 1,700 கேன்டீன்கள் உள்ளன. இதில், ஆண்டுதோறும் ரூ. 2,800 கோடிக்கு வா்த்தகம் நடைபெறுகிறது. 50 லட்சம் குடும்பத்தினா் பயனடைகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com