கர்நாடக வேளாண்துறை அமைச்சர், மனைவி, மருமகனுக்கு கரோனா

கர்நாடக மாநில வேளாண்துறை அமைச்சர், அவரது மனைவி மற்றும் மருமகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக வேளாண்துறை அமைச்சர், மனைவி, மருமகனுக்கு கரோனா
கர்நாடக வேளாண்துறை அமைச்சர், மனைவி, மருமகனுக்கு கரோனா

கர்நாடக மாநில வேளாண்துறை அமைச்சர், அவரது மனைவி மற்றும் மருமகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் பி.சி. பட்டீல் இது பற்றி கூறுகையில், தனக்கும், தனது மனைவிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் விடியோவில், தனக்கும் தனது மனைவி வனஜாவுக்கும் கரோனா அறிகுறி எதுவும் இல்லை என்றும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், யாரும் பயப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

இருவரும் விரைவில் குணமடைந்து, மீண்டும் விரைவாக பணிக்குத் திரும்புவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே நிலையில், பட்டீல் தனது சுட்டுரையில், வெள்ளிக்கிழமை இரவு தனது மருமகனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பட்டீலுக்கு முன்பே, கர்நாடக மாநில வனத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், சுற்றுலாத் துறை அமைச்சர் சி.டி. ரவி ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

மேலும், கர்நாடக மாநில முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகத்தில் சில ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து முதல்வர் பி.எஸ். எடிரப்பாவும் சில வாரங்களுக்கு முன்பு தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். 

கர்நாடக மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 1.24 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,314 பேர் மரணம் அடைந்துள்ளனர். 72 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com