புதிய தேசியக் கல்விக் கொள்கை: வெளிநாட்டு மொழிகளில் சீன மொழி நீக்கம்

புதிய தேசிய கல்விக் கொள்கையில், விருப்ப மொழிப் படங்களின் பட்டியலில் இதுநாள்வரை இடம்பெற்றிருந்த சீன மொழி நீக்கப்பட்டுள்ளது.
புதிய தேசியக் கல்விக் கொள்கை: வெளிநாட்டு மொழிகளில் சீன மொழி நீக்கம்
புதிய தேசியக் கல்விக் கொள்கை: வெளிநாட்டு மொழிகளில் சீன மொழி நீக்கம்

பெங்களூரு: புதிய தேசிய கல்விக் கொள்கையில், விருப்ப மொழிப் படங்களின் பட்டியலில் இதுநாள்வரை இடம்பெற்றிருந்த சீன மொழி நீக்கப்பட்டுள்ளது.

புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை சில நாள்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்துள்ளது.

2019-ஆம் ஆண்டு புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டிருந்தது. அந்த வரைவுப் பட்டியலில் சீன மொழி இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது புதிய தேசியக் கல்விக் கொள்கையில் இடம்பெறவில்லை.

வெளிநாட்டு மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ஜப்பானீஸ் ஆகிய மொழிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அந்த பட்டியலில் சீன மொழி இடம்பெறவில்லை.

புதிய தேசியக் கல்விக் கொள்கை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லடாக் மோதல் விவகாரத்தைத் தொடர்ந்து, சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், தற்போது சீன மொழி நீக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com