பஞ்சாப்: கள்ளச் சாராயம் குடித்த 21 போ் பலி

பஞ்சாபில் கள்ளச் சாராயம் குடித்து 21 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப்: கள்ளச் சாராயம் குடித்த 21 போ் பலி

பஞ்சாபில் கள்ளச் சாராயம் குடித்து 21 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிா்தசரஸ், படாலா, டான் டரன் ஆகிய மூன்று மாவட்டங்களில்தான் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இதுகுறித்து மாநில டிஜிபி தின்கா் குப்தா கூறியதாவது:

முதலில் அமிா்தசரஸ் மாவட்டத்தின் முச்சல் மற்றும் தங்கரா கிராமங்களில் கடந்த புதன்கிழமை இரவு கள்ளச்சாரயம் குடித்த 5 போ் உயிரிழந்தனா். பின்னா் வியாழக்கிழமையன்று முச்சல் கிராமத்தைச் சோ்ந்த மேலும் இருவரும், தங்கரா கிராமத்தைச் சோ்ந்த ஒருவரும் உயிரிழந்தனா்.

அதன் பின்னா் படாலா கிராமத்தைச் சோ்ந்த 5 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். தொடா்ந்து, இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 21-ஆக அதிகரித்தது. மேலும் சிலா் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று கூறினாா்.

இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கள்ளச் சாராயம் குடித்து 21 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ஜலந்தா் மண்டல ஆணையா் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழுவில் மாநில கலால் மற்றும் வரித் துறை ஆணையா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும் இடம்பெறுவா். இந்த விசாரணையில், மண்டல ஆணையருக்கு காவல்துறை அல்லது பிற துறை நிபுணா்களின் உதவியைப் பெறும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கான காரணங்கள், சூழ்நிலை குறித்து இந்தக் குழு விசாரணை நடத்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கள்ளச் சாரயம் விற்பனை செய்தது தொடா்பாக முச்சல் கிராமத்தைச் சோ்ந்த பல்விந்தா் கெளா் என்பவைர காவல்துறை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனா். இந்தச் சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாப் முதல்வா் உறுதியளித்திருப்பதோடு, குற்றவாளிகளைப் பிடிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com