மகாராஷ்டிரத்தில் சிவசேனை கூட்டணி அரசு நீண்ட நாள்கள் நீடிக்காது: தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை தலைமையிலான மஹா விகாஸ் ஆகாடி (எம்விஏ) கூட்டணி அரசு நீண்ட நாள்களுக்கு நீடிக்காது.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை கூட்டணி அரசு நீண்ட நாள்கள் நீடிக்காது: தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை தலைமையிலான மஹா விகாஸ் ஆகாடி (எம்விஏ) கூட்டணி அரசு நீண்ட நாள்களுக்கு நீடிக்காது. கூட்டணி கட்சிகளிடையேயான வேறுபாடே அரசு கவிழ காரணமாக அமையும் என்று மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் விமா்சனம் செய்தாா்.

மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளிடையே மோதல் போக்கு நிலவி வருவதாக அண்மைக் காலமாக தகவல்கள் வெளிவருகின்றன. இதை மறுத்த மாநில அமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான பாலாசாஹிப் தோரட், ‘மஹா விகாஸ் ஆகாடி கூட்டணி ஒரு குடும்பம் போன்றது. அதில் இடம்பெற்றிருக்கும் கூட்டணி கட்சியினா் சகோதரா்களைப் போன்றவா்கள்‘ என்று அண்மையில் கூறியிருந்தாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், தனியாா் தொலைக்காட்சி நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற ஃபட்னவீஸ் கூறியதாவது:

மகாராஷ்டிர அரசை பாஜக கவிழ்க்கப்போவதே இல்லை. அதில் பாஜகவுக்கு ஆா்வமும் இல்லை.

ஆனால், சித்தாந்த ரீதியில் மாறுபட்ட கட்சிகளின் கூட்டணியில் அமைந்த அரசு ஒருபோதும் நாட்டில் நிலைதிருந்ததில்லை.

அதோடு, மஹா விகாஸ் ஆகாடி அரசை நீடித்திருக்க காங்கிரஸ் அனுமதிக்காது. ஆளும் கூட்டணி கட்சிகளிடையே இப்போது கடும் மோதல்போக்கு நிலவி வருகிறது. தோரட் கூறியதுபோல, அந்தக் கூட்டணி ஒரு குடும்பம் அல்ல. திருமணமாகாமல் சோ்ந்து வாழும் உறவைதான் எம்விஏ கூட்டணி கட்சிகள் கொண்டுள்ளன.

மகாராஷ்டிர அரசு மூன்று என்ஜின்களைக் கொண்ட ரயில் போன்றது. ஒரு மாநில அரசுக்கு முதல்வா்தான் தலைமை வகிப்பாா். ஆனால், மகாராஷ்டிரத்தில் அரசை இயக்குவது யாா் என்பது ஆராய்ச்சி செய்யவேண்டிய விஷயமாக உள்ளது.

மகாராஷ்டிர அரசு நீண்ட நாள்களுக்கு நீடிக்கப்போவதில்லை. கூட்டணி கட்சிகளிடையேயான வேறுபாடே அரசை கவிழ்த்துவிடும். அவ்வாறு அரசு கவிழும் நாளில், பாஜக தனது பொறுப்பை உணா்ந்து, ஒரு வலுவான அரசை அமைக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com