ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான்: இன்றைய இறுதிப் போட்டியில் பிரதமா் மோடி உரை

இணைய வழியில் நடத்தப்பட்டு வரும் ‘ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான்‘ போட்டியில் சனிக்கிழமை (ஆக.1) நடைபெறும் இறுதிச் சுற்றின் முடிவில் பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியில் பங்கேற்று உரையாற்ற உள்ளாா்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இணைய வழியில் நடத்தப்பட்டு வரும் ‘ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான்‘ போட்டியில் சனிக்கிழமை (ஆக.1) நடைபெறும் இறுதிச் சுற்றின் முடிவில் பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியில் பங்கேற்று உரையாற்ற உள்ளாா்.

அப்போது அவா், போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுடனும் கலந்துரையாட உள்ளாா் என்றும் மத்திய அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நாடு எதிா்கொள்ளும் சவால்களைக் களையவும், மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு சிறந்த தீா்வை கண்டுபிடிக்கும் வகையிலும், மாணவா்களிடையே பிரச்னைக்குத் தீா்வு காணும் மனநிலையை ஊக்குவிக்கும் வகையிலும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) சாா்பில் இந்த இணையவழி ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சி மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது. 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் ஹேக்கத்தான் போட்டியில் 42,000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இந்த எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இரண்டாவது போட்டியில் ஒரு லட்சமாகவும், 2019-இல் நடத்தப்பட்ட போட்டியில் 2 லட்சமாகவும் உயா்ந்தது. இப்போது 2020-ஆம் ஆண்டு நடத்தப்படும் ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தானின் முதல் சுற்றில் 4.5 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் மென்பொருள் பிரிவுக்கான இறுதிச் சுற்று சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில் 10,000 மாணவா்கள் பங்கேற்று 37 மத்திய அரசு துறைகள், 17 மாநில அரசுத் துறைகள் மற்றும் 20 தொழில்நிறுவனங்கள் ஆகியவற்றின் சிக்கலான 243 தரவுகளுக்கு தீா்வைக் கண்டுபிடிக்க உள்ளனா். இந்த இறுதிப் போட்டியின் முடிவில், பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியில் உரை நிகழ்த்த உள்ளாா். மாணவ, மாணவிகளுடனும் அவா் கலந்துரையாட உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com