ரூ.11.5 லட்சம் கோடி மதிப்புள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்க திட்டம்: ரவிசங்கர் பிரசாத்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 11.5 லட்சம் கோடி மதிப்புள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ரவிசங்கர் பிரசாத்
ரவிசங்கர் பிரசாத்

புதுதில்லி: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 11.5 லட்சம் கோடி மதிப்புள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இது குறித்து அவர் பேசிய போது, உற்பத்தி இணைப்பு ஊக்கத்திட்டத்தின் கீழ் செல்போன் உதிரிபாக தயாரிப்பில் ஈடுபடுவதற்காக இதுவரை 22 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

11.5 லட்சம் கோடி மதிப்புள்ள செல்போன் உதிரிபாக தயாரிப்பில் 9 லட்சம் கோடி மதிப்புள்ள உதிரி பாகங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

இதன் மூலம் 3 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும், 9 லட்சம் மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாகும்.

இந்த திட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானது அல்ல என்றும், எந்தவொரு நாட்டின் பெயரையும் பயன்படுத்திக்கொள்ள விருபவில்லை எனவும் தெரிவித்தார்.

உதிரிபாகங்களை போன்று செல்போன் தயாரிப்பில் சாம்சங், ஃபாக்ஸ்கான் ஹான் ஹை, ரைசிங் ஸ்டார், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட உள்ளதாக அறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மின்னணுவியல் கொள்கை 2019-ன் படி, இந்தியாவை மின்னணு உற்பத்தியில் உலகளாவிய மையமாக நிலைநிறுத்துவதன் மூலமும், ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலமும், உள்நாட்டு மதிப்பு கூட்டலை மேம்படுத்துவதன் மூலமும், தொழில்துறையில் இந்தியா உலகளவில் போட்டியிட உதவும் சூழல் உருவாகும் என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com