மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  (கோப்புப்படம்)

இந்த தகவலை அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

"கரோனாவுக்கான தொடக்கநிலை அறிகுறிகள் இருந்ததையடுத்து, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனது உடல்நிலை சீராக உள்ளது. எனினும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com