ராஜஸ்தான் அரசியல் நெருக்கடிக்கு காங்கிரஸ் உள்கட்சி பூசலே காரணம்: கஜேந்திர சிங் ஷெகாவத்

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அக்கட்சியின் உள்கட்சி பூசலே காரணம் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தாா்.
ராஜஸ்தான் அரசியல் நெருக்கடிக்கு காங்கிரஸ் உள்கட்சி பூசலே காரணம்: கஜேந்திர சிங் ஷெகாவத்

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அக்கட்சியின் உள்கட்சி பூசலே காரணம் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியின் விவரம்:

கடந்த மக்களவைத் தோ்தலில் ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டை நான் தோல்வியடையச் செய்தேன். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக எனது நற்பெயருக்கு கெலாட் களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறாா்.

தனக்கு எதிராக செயல்பட்ட சச்சின் பைலட்டையும், அவரது ஆதரவாளா்களையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்வதற்காகவே முதல்வா் அசோக் கெலாட் இந்த நாடகத்தை நடத்தி வருகிறாா்.

உள்கட்சி பூசலால் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சிப் பாதைக்கு செல்கிறது. ஆனால், பாஜக மீது பழியைப் போட்டு, மூத்த தலைவா்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறாா்கள் என்றாா்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக அந்த மாநில பாஜக துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே செயல்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த ஷேகாவத், ‘இதுவும் ஒரு அரசியல் ராஜதந்திரமாக இருக்கலாம். சில நேரங்களில் வாா்த்தைகளைவிட அமைதிதான் வலுவானதாக இருக்கும்’ என்று தெரிவித்தாா்.

முன்னதாக, அசோக் கெலாட்டுடன் வசுந்தரா ராஜே கூட்டு சோ்ந்துள்ளாா் என ராஷ்ட்ரீய லோக் தாந்திரிக் கட்சியின் அமைப்பாளரும், நகுா் தொகுதி எம்.பி.யுமான ஹனுமான் பெனிவால் குற்றம்சாட்டியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com