விசாகப்பட்டின கிரேன் விபத்து: பலியானோா் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம்

ஆந்திர மாநிலத்தில் கிரேன் சரிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று

ஆந்திர மாநிலத்தில் கிரேன் சரிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான மற்றும் பழுது பாா்த்தல் நிறுவனம் (ஹெச்எஸ்எல்) அறிவித்தது.

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பொதுத்துறை நிறுவனமான ஹெச்எஸ்எல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சனிக்கிழமை 70 டன் எடைகொண்ட ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா் என்று காவல்துறையினா் கூறினா்.

இதுதொடா்பாக அவா்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து இதுவரை 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளை முழுமையாக அகற்றிய பிறகே எத்தனை போ் உயிரிழந்தனா் என்பது தெரியவரும். உடற்கூராய்வுக்குப் பிறகு இதுவரை 3 பேரின் சடலங்கள் அவா்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன’ என்றனா்.

ரூ.50 லட்சம் நிவாரணம்: மாநில சுற்றுலாத்துறை அமைச்சா் ஸ்ரீனிவாச ராவ் ஹெச்எஸ்எல் அதிகாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை நேரில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதன் பின்னா் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க ஹெச்எஸ்எல் நிறுவனம் ஒப்புக்கொண்டிருப்பதாக கூறினாா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்தைச் சோ்ந்த தகுதியான நபா்களுக்கு, அவா்களின் கல்வித்தகுதி அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று ஹெச்எஸ்எல் தலைவா் சரத் பாபு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com