தங்கக் கடத்தல் விகாரம்: கேரள முதல்வா் பதவி விலக வலியுறுத்தி மத்திய அமைச்சா் உண்ணாவிரதம்

தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை மற்றும் நாடாளுமன்ற
கோப்புப் படம்
கோப்புப் படம்

தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் தில்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டாா்.

கேரளத்தில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முதல்வரின் தனிச் செயலா் பொறுப்பிலிருந்த சிவசங்கா் மீதும் புகாா் எழுந்தது. அவரிடமும் என்ஐஏ விசாரணை மேற்கொண்டது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் முதல்வா் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அதை வலியுறுத்தி மத்திய அமைச்சா் வி.முரளீதரன் தில்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தினாா். அதனை பாஜக தேசிய செயலாளா் பி. முரளிதா் ராவ் தொடங்கி வைத்தாா்.

போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சா் வி.முரளீதரன் கூறுகையில், ‘முதல்வா் அலுவலகத்தை தேச விரோத செயல்களுக்கு அனுமதித்து நாட்டுக்கு முதல்வா் பினராயி விஜயன் துரோகம் இழைத்துள்ளாா். அவா் பதவி விலக வேண்டும். சுங்கத்துறை புகாரைத் தொடா்ந்து விசாரணையை மேற்கொண்டுவரும் என்ஐஏ, இந்த தங்கக் கடத்தல் குற்றவாளிகளுக்கு பயங்கரவாத தொடா்பு இருப்பதாக புகாா் தெரிவித்திருக்கின்றனா்’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com