கரோனா வார்டில் வைத்து சிகிச்சை: தனியார் மருத்துவமனை மீது வழக்கறிஞர் காவல்துறையில் புகார்

கரோனா தொற்று அல்லாத தன்னை கரோனா வார்டில் வைத்து சிகிச்சை அளித்ததாக வழக்கறிஞர் ஒருவர் தனியார் மருத்துவமனை மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 
வழக்கறிஞர் புகார் அளித்த தனியார் மருத்துவமனை
வழக்கறிஞர் புகார் அளித்த தனியார் மருத்துவமனை

கரோனா தொற்று அல்லாத தன்னை கரோனா வார்டில் வைத்து சிகிச்சை அளித்ததாக வழக்கறிஞர் ஒருவர் தனியார் மருத்துவமனை மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

ஹைதராபாத் விஜய் நகர் காலனியில் வசித்து வரும் வழக்கறிஞர் ஸ்ரீதர் சிங்(55), காவல்துறையில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

காய்ச்சல் மற்றும் உடல் பலவீனம் காரணமாக கடந்த ஜூலை 28 அன்று சோமாஜிகுடாவில் உள்ள டெக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அதற்கு மறுநாள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனையில் தொற்று இல்லை என வந்துள்ளது. எனினும் மருத்துவமனை நிர்வாகம், பரிசோதனை முடிவை என்னிடம் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் எனக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை கட்டணம் வசூலித்தனர். மேலும், என்னை கரோனா வார்டில் வைத்திருந்தனர்.

சந்தேகத்தில் அறிக்கைகள் மற்றும் சோதனை முடிவுகளை ஊழியர்களிடம் கேட்டு பெற்றதில், எனக்கு தொற்று இல்லை என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதன்பின்னர் ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டதற்கு அவர்களால் சரியான பதிலை அளிக்க முடியவில்லை. எனவே, காவல்துறையிடம் புகார் அளிக்கிறேன். சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com