எடியூரப்பாவை சந்தித்திருந்தால் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்: கர்நாடக அரசு

முதல்வர் எடியூரப்பாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சமீபத்தில் முதல்வரை சந்தித்த பொதுமக்கள் தாங்களாகவே கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
முதல்வரை சந்தித்திருந்தால் கரோனா சோதனை செய்துகொள்ளுங்கள்: கர்நாடக அரசு
முதல்வரை சந்தித்திருந்தால் கரோனா சோதனை செய்துகொள்ளுங்கள்: கர்நாடக அரசு


பெங்களூரு: முதல்வர் எடியூரப்பாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சமீபத்தில் முதல்வரை சந்தித்த பொதுமக்கள் தாங்களாகவே கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும், அவரது மகளுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடக முதல்வரின் பயண விவரங்களை சேகரிக்க இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் முதல்வரை நேரில் சந்தித்தவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். முதல்வர் கடந்த வாரத்தில் மேற்கொண்ட சந்திப்பு, பயண விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

எடியூரப்பாவும், அவரது மகளும் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எடியூரப்பாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சுட்டுரையில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பரிசோதனையில் எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், எனது உடல்நிலையில் பெரிய பாதிப்பு ஏதுமில்லை. எனினும், மருத்துவா்களின் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். சமீப நாள்களில் என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் தங்களை, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com