பான் கார்டு தொலைந்துவிட்டதா? புதிதாகப் பெறுவது எப்படி?

பான் கார்டு தொலைந்துவிட்டால் புதிதாக பான் கார்டு (duplicate PAN Card) ஆன்லைன் மூலமாகப் பெறுவது எப்படி?
பான் கார்டு (கோப்புப்படம்)
பான் கார்டு (கோப்புப்படம்)

வங்கிக்கணக்கு, வருமான வரித் தாக்கல் என நிதி சார்ந்த பல முக்கிய விஷயங்களுக்கு 'பான் கார்டு' எனும் நிரந்தர கணக்கு எண் (PAN) தேவைப்படுகிறது. 

தற்போது பான் கார்டு புதிதாக பெற வேண்டும் என்றாலோ, தொலைந்துவிட்டாலோ ஆன்லைன் மூலமாக பெறும் வழிகள் உள்ளன. அந்த வகையில், பான் கார்டு தொலைந்துவிட்டால் புதிதாக பான் கார்டு பெற என்ன செய்யலாம்...

► முதலில் விண்ணப்பிப்பதற்கு முன்னதாக, பான் எண்ணுடன் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி இணைந்திருக்க வேண்டியது அவசியம். 

► வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tin-nsdl.com என்ற இணையதள முகவரியில் சென்று 'பான் கார்டு நகல் எடுக்க' (reprint of your PAN) என்பதை கிளிக் செய்யவும்.

►  இப்போது திறக்கும் தனி திரையில் உங்களது பான் எண், ஆதார் எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட வேண்டும்.

►  அடுத்து கேப்ட்சா கோடு அளித்து 'submit' என்பதை கிளிக் செய்யவும். மேலும் பான் கார்டு நகலுக்கு  ரூ. 50 செலுத்த வேண்டும். 

►  ஒருவேளை, பான் கார்டு வெளிநாட்டு முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றால் ரூ. 959 செலுத்த வேண்டும். 

► தொடர்ந்து, பான் கார்டு விண்ணப்பிக்கும்போது அளித்த மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அளிக்க வேண்டும். இரண்டில் ஏதேனும் ஒன்றை உள்ளிட்டாலே போதுமானது. இப்போது, மொபைல் எண்ணுக்கும், மின்னஞ்சலுக்கும் வரும் ஒடிபி எண்ணை உள்ளிட வேண்டும். (மொபைல் எண், மின்னஞ்சல் முகவரியை மாற்ற வேண்டும் என்றால் அதற்கென தனி வழிமுறைகள் உள்ளன)

► அடுத்ததாக விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த, உங்கள் பான் கார்டு நகல் பதிவிறக்கம் ஆகிவிடும். அதை நீங்கள் பிடிஎப் வடிவில் எடுத்துக்கொள்ளலாம். மேலும், உங்களது முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும். 

► அதேநேரத்தில் உங்கள் மொபைல் எண்ணுக்கும், மின்னஞ்சலுக்கும் பான் கார்டு நகல் எடுப்பதற்கான லிங்க்கும் அனுப்பப்படும். எதிர்காலத்தில் இந்த லிங்கை பயன்படுத்தி, பான் கார்டு நகலை பதிவிறக்கம் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com