பிரதமர் அலுவலகம் தலையிட்டதால் தேநீர் விலை குறைந்தது

கொச்சி விமான நிலையத்தில் தேநீர் மற்றும் நொறுக்குத் தீனிகளின் விண்ணை முட்டும் விலையானது, பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டால் குறைந்துள்ளது.
பிரதமர் அலுவலகம் தலையிட்டதால் தேநீர் விலை குறைந்தது
பிரதமர் அலுவலகம் தலையிட்டதால் தேநீர் விலை குறைந்தது


கொச்சி: கொச்சி விமான நிலையத்தில் தேநீர் மற்றும் நொறுக்குத் தீனிகளின் விண்ணை முட்டும் விலையானது, பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டால் குறைந்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் தற்போது ஒரு கோப்பை தேநீர் விலை ரூ.15, காபி விலை ரூ.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொச்சி விமான நிலையத்தில் ஒரு கோப்பை தேநீர் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த விவகாரம், திரிசூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஷாஜி கோடன்கண்டத் மூலம் எழுப்பப்பட்டது.

இது குறித்து அவர் கூறுகையில், அது நடந்தது ஏப்ரல் 2019-ஆம் ஆண்டில் நான் புது தில்லி சென்றபோது. உள்ளூர் விமானச் சேவையில் பயணிக்கும் பயணிகள் 2 அல்லது 3 மணி நேரத்துக்கு முன்பாகவே விமான நிலையத்துக்கு வந்து விட வேண்டும். அப்படி வரும் விமானப் பயணிகள் அங்கே கடைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். அதேப்போல நான் ஒரு கடையில் வெறும் பால் இல்லாத தேநீர் கேட்டேன். அதற்கு கடைக்காரர் ரூ.100 செலுத்துமாறு கூறினார். ஒரு டீ பேக், சுடுநீர், ஒரு காகிதக் கப் இவற்றின் மதிப்பு ரூ.100. ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி இந்த விலையை அந்த கடைக்காரர் நியாயப்படுத்தினார்.

ஒரு பொருளை அதன் விலையில் நான்கு மடங்கு அதிக விலைக்கு விற்பதால், சாதாரண, எளிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வந்தனர் என்கிறார் ஷாஜி.

இது குறித்து இந்திய விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தும், கொச்சி விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் முறையான பதில்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து பிரதமர் அலுவலகத்தில் புகார் பதிவு செய்தேன்.

பிரதமர் அலுவலகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்ததை அடுத்து, விமான நிலையத்தில் அமைந்துள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டது. அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட அதிக விலைக்கு பாக்கெட் பொருள்களை விற்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com