ரக்க்ஷா பந்தன்: சகோதரியின் விருப்பத்தை ஏற்று சரணடைந்த நக்சல்

ரக்க்ஷா பந்தன் நாளில் தனது சகோதரியின் விருப்பத்தை ஏற்று, காவல்நிலையத்தில் சரணடைந்தார் நக்ஸல் படையைச் சேர்ந்த இளைஞர்.
ரக்க்ஷா பந்தன்: சகோதரியின் விருப்பத்தை ஏற்று சரணடைந்த நக்சல்
ரக்க்ஷா பந்தன்: சகோதரியின் விருப்பத்தை ஏற்று சரணடைந்த நக்சல்


தண்டேவாடா: ரக்க்ஷா பந்தன் நாளில் தனது சகோதரியின் விருப்பத்தை ஏற்று, காவல்நிலையத்தில் சரணடைந்தார் நக்ஸல் படையைச் சேர்ந்த இளைஞர்.

சத்தீஷ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியைச் சேர்ந்த மல்லா நக்ஸல் அமைப்பைச் சேர்ந்தவர். 12 வயதாக இருந்த போது வீட்டை விட்டு ஓடிய மல்லா நக்ஸலில் சேர்ந்துள்ளார்.

இவரது தாக்குதலில் ஏராளமான காவல்துறையினர் மரணம் அடைந்த நிலையில், இவரது தலைக்கு ரூ.8 லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்தது காவல்துறை.

இந்த நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டேவாடா மாவட்டம் பல்நர் கிராமத்துக்குத் திரும்பிய மல்லாவுக்கு ராக்கிக் கயிறு கட்டிய சகோதரி, மீண்டும் நக்ஸல் அமைப்புக்குத் திரும்ப விடமாட்டேன் என்றும், காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என்றும் தனது ரக்க்ஷா பந்தன் விருப்பத்தைக் கூறியுள்ளார.

சத்தீஸ்கரில் நக்ஸல் அமைப்பினர் திரும்பி வந்து மறுவாழ்வு வாழ உள்ளூர் காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் மல்லா தற்போது காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com