ராமர் கோயில் பூமி பூஜையில் உத்தவ் பங்கேற்பது சந்தேகம்

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பங்கேற்க மாட்டார் என சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

இந்த நிலையில், உத்தவ் தாக்கரே பங்கேற்பது பற்றி சஞ்சய் ரௌத் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"ராமர் கோயில் கட்டுவதற்கான பிரசாரத்துக்கு சிவசேனை பங்களித்துள்ளது. கோயில் கட்டுமானத்துக்காக கட்சி சார்பாக ரூ. 1. கோடி வழங்கப்பட்டுள்ளது. அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா பரவல் பிரச்னைக்குரிய விஷயமாக உள்ளது. உத்தரப் பிரதேச அமைச்சர் கமல் ராணி கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். 3 அமைச்சர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

என்னைப் பொறுத்தவரை குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கேற்று விழா நடைபெற வேண்டும். பிரதமர் செல்வது முக்கியம். முதல்வர் தாக்கரே எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்." என்றார்.

இதைத் தொடர்ந்து பூமி பூஜைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்குப் பதிலளித்து அவர் தெரிவித்ததாவது:

"யாரும் அழைப்புக்காகக் காத்திருக்கவில்லை. இந்த விவகாரத்தில் சிவசேனை அரசியல் சாயம் பூச விரும்பவில்லை. அங்கு ஒரு வகையான மருத்துவ அவசர நிலை நிலவி வருகிறது. 

நீங்கள் (ஊடகங்கள்) யார் போகிறார்கள் என்று கேட்கிறீர்கள். முடிந்தளவுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் பங்கேற்க வேண்டும். நாங்கள் பின்னர் செல்கிறோம். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி என கோயில் கட்டுவதற்கு முக்கியப் பங்காற்றியவர்களும் கரோனா தொற்றால் பூமி பூஜையில் பங்கேற்கவில்லை.

கோயில் கட்டுவதற்கு நாங்கள்தான் அடிக்கல் நாட்டினோம். பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால் கோயில் கட்டுவது சாத்தியமாகியிருக்காது. சிவசேனை தொண்டர்கள்தான் மசூதியை இடித்தனர் என்பதை பாஜக, விஹெச்பி மற்றும் சங் பரிவார் அமைப்புகளே ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே, நாங்கள்தான் பாதை அமைத்துள்ளோம். கோயில் கட்டுவது எங்களுக்கு மகிழ்ச்சி." என்றார் சஞ்சய் ரௌத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com