மகாத்மா காந்தி நினைவாக நாணயம் வெளியிட பிரிட்டன் அரசு திட்டம்

இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய மகாத்மா காந்தியை நினைவுகூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய மகாத்மா காந்தியை நினைவுகூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் கருவூலத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மகாத்மா காந்தியின் நினைவாக நாணயம் வெளியிட பரிசீலிக்குமாறு பிரிட்டனின் ‘ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி’ (ஆா்எம்ஏசி) என்ற ஆலோசனைக் குழுவை அந்நாட்டின் நிதியமைச்சா் ரிஷி சுனக் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டாா். அதன்படி, மகாத்மா காந்தி நினைவாக நாணயம் வெளியிட அந்தக் குழு பரிசீலித்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் பல்வேறு நிபுணா்களை உள்ளடக்கிய தனி அதிகாரம் படைத்த இந்த ஆா்எம்ஏசி குழுதான், நாணயத்தின் வடிவம் மற்றும் கருப்பொருள் குறித்த பரிந்துரையை அந்நாட்டு நிதியமைச்சருக்கு அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com