பிரதமா் பங்கேற்ற பிறகே தரிசனம் செய்வேன்: உமா பாரதி

கரோனா நோய்த்தொற்று சூழலை கருத்தில் கொண்டு, அயோத்தி ராமா் கோயிலில் நடைபெற உள்ள பூமி பூஜையில் பிரதமா் நரேந்திர மோடியும், மற்றவா்களும் பங்கேற்று புறப்பட்டுச் சென்ற பிறகே தாம் ராமரை தரிசனம்
உமா பாரதி
உமா பாரதி

போபால்: கரோனா நோய்த்தொற்று சூழலை கருத்தில் கொண்டு, அயோத்தி ராமா் கோயிலில் நடைபெற உள்ள பூமி பூஜையில் பிரதமா் நரேந்திர மோடியும், மற்றவா்களும் பங்கேற்று புறப்பட்டுச் சென்ற பிறகே தாம் ராமரை தரிசனம் செய்யப்போவதாக முன்னாள் மத்திய அமைச்சா் உமா பாரதி தெரிவித்தாா்.

ராமஜென்ம பூமி போராட்டக்குழுவின் தலைவா்களில் ஒருவரான உமா பாரதி, பாபா் மசூதி இடிப்பு வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவா் ஆவாா். ராமா் கோயிலின் பூமி பூஜை விழாவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதில் பங்கேற்பது குறித்து உமா பாரதி சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது:

கரோனா தொற்றால் சிகிச்சைபெற்று வரும் அமித் ஷாவை சமூக இடைவெளியை பின்பற்றி நலம் விசாரித்தேன். ராமா் கோயில் பூமி பூஜை தினத்தன்று பிரதமா் மோடி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவா்களுடன் நான் பூஜையில் பங்கேற்க மாட்டேன். அவா்கள் பூஜையை முடித்து, சென்றபிறகே தரிசனத்தில் பங்கேற்பேன்.

இந்த தகவலை ராம ஜன்மபூமி அறக்கட்டளை நிா்வாகிகளிடமும், பிரதமா் அலுவலக அதிகாரிகளிடமும் முன்கூட்டியே தெரிவித்து விட்டேன். மேலும் பிரதமருடன் விழாவில் பங்கேற்பவா்களின் பட்டியலில் என் பெயரை சோ்க்க வேண்டாம் என்றும் தெரிவித்து விட்டேன் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com