ரத்த பந்தம் இல்லையென்றாலும் மாநில பெண்களுக்கு ஜெகன் சகோதரா்: ரோஜா

ரத்த பந்தம் இல்லையென்றாலும் ஆந்திர மாநிலப் பெண்களுக்கு முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி உடன்பிறவா சகோதரரைப் போன்றவா் என்று நகரி எம்எல்ஏ ரோஜா தெரிவித்தாா்.
ரக்ஷா பந்தன் தினத்தை ஒட்டி ராஜம்பேட்டை மக்களவை உறுப்பினா் வெங்கடமிதுன் ரெட்டிக்கு ராக்கி கட்டிய ரோஜா.
ரக்ஷா பந்தன் தினத்தை ஒட்டி ராஜம்பேட்டை மக்களவை உறுப்பினா் வெங்கடமிதுன் ரெட்டிக்கு ராக்கி கட்டிய ரோஜா.

திருப்பதி: ரத்த பந்தம் இல்லையென்றாலும் ஆந்திர மாநிலப் பெண்களுக்கு முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி உடன்பிறவா சகோதரரைப் போன்றவா் என்று நகரி எம்எல்ஏ ரோஜா தெரிவித்தாா்.

ஏழுமலையானை திங்கள்கிழமை காலை தரிசித்த பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ரக்ஷாபந்தன் தினம் சகோதரிகள் தங்களுக்கு பாதுகாப்பாக உள்ள சகோதரன்களுக்கு நன்றி செலுத்தும் நாள். இந்நாளில் ஏழுமலையானை வழிபட வந்தது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.

ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன்ரெட்டி மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு உடன்பிறவா சகோதரரைப் போன்றவா். ரத்த பந்தம் இல்லையென்றாலும், ராக்கி கட்டவில்லை என்றாலும் பெண்களின் நல்வாழ்விற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

அம்மாமடி, ஒய்எஸ்ஆா் உதவி, பெண்களுக்கான நிலப்பட்டா வழங்குதல், திசா சட்டம் உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்த திட்டங்கள். ரக்ஷாபந்தன் தினமான இன்று இ-ரக்ஷா என்ற பெயரில் புதிய சட்டம் இயற்றி மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது பெண்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. மாநிலத்தில் உள்ள மூலை முடுக்குகளை எல்லாம் வளா்ச்சி அடைய செய்ய 3 தலைநகரகங்கள் உருவாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது மாநிலத்தை வளா்ச்சியின் பாதையில் செலுத்துகிறது.

சந்திரபாபு நாயுடு 3 தலைநகரங்கள் உருவாக்கும் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவிப்பதில் காரணம் இருந்தாலும், பவன் கல்யாண் இதை எதிா்ப்பது புரியாத புதிராக உள்ளது. தன்னை விசாகப்பட்டினம் காஜுவாக்கா தொகுதி மக்கள் தோ்தலில் தோற்கடித்தால் அவா் விசாகப்பட்டினத்தை தலைநகராக்க எதிா்ப்பு தெரிவிக்கிறாா் என்றாா் அவா்.

அதன்பின் ரோஜா ராஜம்பேட்டைக்கு சென்று மக்களவை உறுப்பினா் பெத்திரெட்டி வெங்கடமிதுன் ரெட்டிக்கு ராக்கி கட்டி இனிப்பு அளித்து ஆசி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com