சீன செயலிக்கு மாற்றாக புதிய செயலி: காஷ்மீர் இளைஞர் கண்டுபிடிப்பு

தடை செய்யப்பட்ட சீன செயலிகளுக்கு மாற்றாக அலைபேசிகளில் கோப்புகளை பரிமாறிக் கொள்ள புதிய செயலியை ஜம்மு காஷ்மீர் இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தடை செய்யப்பட்ட சீன செயலிகளுக்கு மாற்றாக அலைபேசிகளில் கோப்புகளை பரிமாறிக் கொள்ள புதிய செயலியை ஜம்மு காஷ்மீர் இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

இந்திய எல்லை கல்வானில் நடந்த தாக்குதலுக்குப் பின் மத்திய அரசு பாதுகாப்புக் குறைபாடுகளை காரணமாகக் காட்டி டிக்டாக், சேர்இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது.

இதனால் அதனைப் பயன்படுத்தி வந்த பல்வேறு பயனாளிகள் அந்த செயலிகளுக்கு மாற்றான செயலிகள் இல்லாததால் தவித்தனர்.அதேசமயம் சீன செயலிகள் தடைவிதிக்கப்பட்டது உலக அளவில் பல்வேறு விவாதங்களையும் கிளப்பியது.

இந்நிலையில் கோப்புகளை அலைபேசிகளுக்கிடையில் பகிர்ந்துகொள்ள பயன்படுத்தப்பட்டு வந்த சேர்இட் செயலிக்கு பதிலாக ஜம்மு காஷ்மீர் இளைஞர் ஃபைல் சேர் டூல் எனும் புதிய செயலியை வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய பயனாளர் ஒருவர்,  “இந்த செயலி பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. மிக எளிமையாக இதன் மூலம் கோப்புகளை பகிர்ந்து கொள்ள முடிகிறது.” எனத் தெரிவித்தார்.

இந்த செயலியை உருவாக்கிய திப்பு சுல்தான் வாணி பேசுகையில், “ இதற்கு முன் பல செயலிகளை உருவாக்கி இருந்தாலும் இந்த செயலி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தக்காலம் தொழில்நுட்பங்களின் காலம். விநாடிக்கு 40 எம்பி வேகத்தில் கோப்புகளை இந்த செயலியின் மூலம் அனுப்ப முடியும்.” என்றார்.

மேலாண்மைக் கல்வியை முடித்துள்ள திப்பு சுல்தான் பின்னர் அலைபேசி செயலிகள் உருவாக்கம் குறித்த ஈடுபாட்டின் காரணமாக இந்தத் துறையில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ஹாட்ஸ்பாட் மற்றும் இணைய வசதிகளை பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை கூகிள் பிளே ஸ்டோர்-ல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com