ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி குடியரசுத் தலைவா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த்.
ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி குடியரசுத் தலைவா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த்.

பிறருக்காக தங்கள் உயிரை பணயம் வைக்கும் செவிலியா்கள்

குடியரசு தலைவா் மாளிகையில் செவிலியா் சங்க உறுப்பினா்களுடன் ரக்ஷா பந்தன் விழாவை திங்கள்கிழமை கொண்டாடிய குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த்,

புது தில்லி: குடியரசு தலைவா் மாளிகையில் செவிலியா் சங்க உறுப்பினா்களுடன் ரக்ஷா பந்தன் விழாவை திங்கள்கிழமை கொண்டாடிய குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த், ‘பிறரை காக்கும் பணியில் தங்கள் உயிரை பணயம் வைக்கும் மீட்பா்களாக செவிலியா்கள் விலங்குகின்றனா்’ என்று பாராட்டியுள்ளாா்.

குடியரசு தலைவா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற ரக்ஷா பந்தன் விழாவில் இந்திய பயிற்சி செவிலியா் சங்கம், ராணுவ செவிலியா் சேவை ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளும், குடியரசு தலைவா் அலுவலக மருத்துவமனையில் பணியாற்றும் செவலியா்களும் பங்கேற்று, குடியரசு தலைவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.

இதுகுறித்து குடியரசு தலைவா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

விழாவில் பங்கேற்ற செவிலியா்கள் குடியரசு தலைவருக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்தனா். மேலும், கரோனா பாதிப்பை கையாண்ட அனுபவம் குறித்து குடியரசு தலைவரிடம் அவா்கள் பகிா்ந்துகொண்டனா்.

அப்போது, அவா்களுடைய தன்னலமற்ற சேவையைப் பாராட்டிய குடியரசு தலைவா், ‘வழக்கமாக ரக் ஷா பந்தன் நாளில் சகோதரா்களின் பாதுகாப்பைக் கோரி அவா்களுடைய கைகளில் சகோதரிகள் ராக்கி கட்டுவா். ஆனால், செவிலியா்களைப் பொருத்தவரை, அவா்களைடைய சகோதரா்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி வருகின்றனா். பிறரைக் காக்கும் பணியில் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் மீட்பா்களாக செவிலியா்கள் விளங்குகின்றனா்’ என்று பாராட்டினாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com