முதல் பொது முடக்கத்துக்குப் பிறகு பதிவாகியுள்ள குறைந்தபட்ச இறப்பு விகிதம்: மத்திய அரசு

​முதல் பொது முடக்கத்துக்குப் பிறகு கரோனா தொற்றால் பலியானோரின் இறப்பு விகிதம் தற்போது குறைந்தபட்சமாக பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
​முதல் பொது முடக்கத்துக்குப் பிறகு கரோனா தொற்றால் பலியானோரின் இறப்பு விகிதம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
​முதல் பொது முடக்கத்துக்குப் பிறகு கரோனா தொற்றால் பலியானோரின் இறப்பு விகிதம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


​முதல் பொது முடக்கத்துக்குப் பிறகு கரோனா தொற்றால் பலியானோரின் இறப்பு விகிதம் தற்போது குறைந்தபட்சமாக பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்ததாவது:

"கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 6.6 லட்சம் பரிசோதனைகள் உள்பட மொத்தம் 2 கோடிக்கும் மேலான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் குணமடைந்தோர் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. முதல் பொது முடக்கத்துக்குப் பிறகு, தற்போதுதான் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.

நிறைய மாநிலங்கள் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. கோவா, தில்லி, திரிபுரா மற்றும் தமிழகம் பரிசோதனை திறனை அதிகரித்துள்ளன. 

இந்தியாவில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 8.89 சதவிகிதமாக உள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகத்தில் 10 சதவிகிதத்துக்கும் குறைவாக கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. கடந்த வாரம் இந்தியாவில் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 11 சதவிகிதமாக இருந்தது. சில மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதையே இது வெளிப்படுத்துகிறது.

முதல் பொது முடக்கத்துக்குப் பிறகு தற்போதுதான் குறைந்தபட்ச கரோனா இறப்பு விகிதம் (2.10 சதவிகிதம்) பதிவாகியுள்ளது. உள்ளது. இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் குறைகிறது. 

தற்போதைய நிலையில் இந்தியாவில் மொத்தம் 5,86,298 பேர் சிகிச்சையில் பெற்று வருகின்றனர். 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். கரோனா காரணமாக பலியானோரில் 50 சதவிகிதம் பேர், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 45 முதல் 60 வயதுக்குள்பட்டவர்களில் பலியானோர் 37 சதவிகிதம் பேர்." என்றார் ராஜேஷ் பூஷண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com