ராஜஸ்தானில் நாளை முதல் யோகா மையங்கள் திறப்பு

ராஜஸ்தானில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் புதன்கிழமை முதல் திறக்கப்பட இருக்கின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராஜஸ்தானில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் புதன்கிழமை முதல் திறக்கப்பட இருக்கின்றன.

கரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தற்போது கரோனா பரவல் குறைந்த பகுதிகளில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் புதன்கிழமை முதல் உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா மையங்களை திறந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் மற்றும் தனிநபர் இடைவெளிகளை பின்பற்றுதல் போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது 46 ஆயிரத்து 106 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com