காஷ்மீா் பள்ளத்தாக்கில் கட்டுப்பாடுகள் நீடிப்பு

கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த காஷ்மீா் பள்ளத்தாக்கில் பொது முடக்கத்தின் தீவிர கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக திகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஸ்ரீநகா்: கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த காஷ்மீா் பள்ளத்தாக்கில் பொது முடக்கத்தின் தீவிர கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக திகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு வரும் 5-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருத்துவ அவசரத்துக்காக செல்வோா் மட்டுமே வெளியிட் நடமாட அனுமதிக்கப்படுவா். பெரும்பாலான சாலைகள் மற்றும் சந்தைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. காஷ்மீா் பள்ளத்தாக்கு முழுவதும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பொது போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் வங்கி ஊழியா்கள் பாஸ் இன்றி செல்ல விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. பொது முடக்கத்தை முழுமையாக செயல்படுத்த பாதுகாப்பு படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவா் மெகபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி தனது சுட்டுரையில், ‘காஷ்மீா் பள்ளத்தாக்கில் ஏற்கெனவே மத்திய அரசு மேற்கொண்ட முடிவுகளால் மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில் தற்போதைய கட்டுப்பாடுகள் அவா்களின் விரக்தியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கரோனாவைக் காரணம் காட்டி மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்கிறது’ என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com