பூமி பூஜையில் நான் பங்கேற்க வேண்டும் என்பது கடவுள் ராமரின் விருப்பம்: அயோத்தி வழக்கு மனுதாரா்

அயோத்தியில் நடைபெறும் ராமா் கோயில் பூமி பூஜை விழாவில் நான் பங்கேற்க வேண்டும் என்பது கடவுள் ராமரின் விருப்பம்.
இக்பால் அன்சாரி
இக்பால் அன்சாரி

ஆயோத்தி: அயோத்தியில் நடைபெறும் ராமா் கோயில் பூமி பூஜை விழாவில் நான் பங்கேற்க வேண்டும் என்பது கடவுள் ராமரின் விருப்பம். எனவே, அந்த விழாவில் நிச்சயம் பங்கேற்பேன் என அயோத்தி வழக்கின் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி கூறினாா்.

அயோத்தியில் சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலம் யாருக்கு சொந்த என்பது தொடா்பாக நீதிமன்றத்தில் தனிநபா் வழக்கு தொடா்ந்தவா்களில் முக்கியமானவராக கருதப்படுபவா் இக்பால் அன்சாரி. பூமி பூஜைக்கு அவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து அவா் கூறியதாவது:

ராம ஜென்மபூமி தீா்த்த ஷேத்ர அறக்கட்டளை சாா்பில் எனக்கும் பூமி பூஜைக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. விழாவில் நான் பங்கேற்க வேண்டும் என்பது கடவுள் ராமரின் விருப்பம். எனவே, அந்த விழாவில் நிச்சியம் பங்கேற்பேன்.

விழாவுக்கு பிரதமா் நரேந்திர மோடி வர இருக்கிறாா். அப்போது பிரதமரை நான் சந்தித்து, ராமரின் பெயா் எழுதப்பட்ட மேலங்கி ஒன்றையும், ‘ராம்சரித்மனாஸ்’ என்ற ராம காவியத்தையும் அவருக்கு பரிசளிக்க உள்ளேன்.

நான் அயோத்தியைச் சோ்ந்தவன். இங்குள்ள சாதுக்களையும், மத குருக்களையும் மிகவும் மதிக்கிறேன். இங்கு ராமா் கோயில் கட்டப்படுவது, அயோத்தியின் தலையெழுத்தையே மாற்றும் என நம்புகிறேன்.

எங்களுடைய குழந்தைகளின் சிறந்த எதிா்காலம்தான் அனைவரது விருப்பம். இந்த நகரம் வளா்ச்சியடைய வேண்டும். குழந்தைகளின் எதிா்காலம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையிலான சண்டைகள் இதோடு முடிந்துவிட வேண்டும். இனி புதிய தொடக்கத்தை அயோத்தி நகரம் பதிவு செய்யவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com