மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் கரோனா பரிசோதனைகள் குறைவு: உலக சுகாதார மைய விஞ்ஞானி தகவல்

மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் கரோனா பரிசோதனைகள் குறைவாக செய்யப்படுவதாக என  உலக சுகாதார மைய விஞ்ஞானி தெரிவித்துள்ளார் 
கரோனா பரிசோதனை செய்யப்படும் காட்சி
கரோனா பரிசோதனை செய்யப்படும் காட்சி

மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் கரோனா பரிசோதனைகள் குறைவாக செய்யப்படுவதாக என  உலக சுகாதார மைய விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாள்தோறும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது உயர்ந்து உலகின் முன்னணி பட்டியலில் இடம் பெறும் அளவிற்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கரோனா பரிசோதனைகள் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது போதுமானதாக இல்லை என உலக சுகாதார மையத்தின் விஞ்ஞானி திருமதி.செளமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், “பொதுமுடக்கம் என்பது கரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உள்ள ஒரு தற்காலிக நடவடிக்கை தான். ஜெர்மனி, தைவான், தென் கொரியா, ஜப்பான் போன்ற சிறப்பாக செயல்பட்ட நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் கரோனா பரிசோதனை விகிதங்கள் மிகக் குறைவு உள்ளது.” என்றார்.

காணொலி காட்சி மூலம் நடந்த கருத்தரங்கில் பேசிய அவர், “அதிக பாதிப்புகளைச் சந்தித்த அமெரிக்கா கூட ஏராளமான மக்களைச் சோதித்து வருகிறது. இந்தியாவும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “ கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விகிதம் ஐந்து சதவீதத்திற்கு மேல் இருப்பதால் தற்போது நடத்தப்படும் சோதனைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.” எனத் தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 8.89 சதவிகிதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com