கரோனா காலத்தில் கடவுள் பக்தி உயர்ந்திருக்குமா? குறைந்திருக்குமா? ஆய்வு

ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 16க்கும் மேற்பட்ட மருத்துவ நிலையங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில், கரோனா பேரிடர் காலத்தில் சுமார் 21.2% பேருக்கு கடவுள் பக்தி அதிகரித்திருப்பதாகவும், 18.3% பேருக்கு சற்று கடவுள் பக்தி உயர்ந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
கரோனா காலத்தில் கடவுள் பக்தி உயர்ந்திருக்குமா? குறைந்திருக்குமா? ஆய்வு
கரோனா காலத்தில் கடவுள் பக்தி உயர்ந்திருக்குமா? குறைந்திருக்குமா? ஆய்வு

டேஹ்ராடூன்: ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 16க்கும் மேற்பட்ட மருத்துவ நிலையங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில், கரோனா பேரிடர் காலத்தில் சுமார் 21.2% பேருக்கு கடவுள் பக்தி அதிகரித்திருப்பதாகவும், 18.3% பேருக்கு சற்று கடவுள் பக்தி உயர்ந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 50% பேருக்கு கரோனா பேரிடர் காலத்திலும் தங்களது கடவுள் பக்தியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், 4.4% பேருக்கு சற்று நம்பிக்கைக் குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த கரோனா காலத்தில் தங்களது வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், உடற்பயிற்சி செய்வது, செல்லிடப்பேசியில் விளையாடுவது, உள்ளரங்க விளையாட்டு, புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, சமையல் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது போன்ற செயல்பாடுகளும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கத்தால் ஐந்தில் 2 பேருக்கு மன அழுத்தம் போன்ற மனநலப் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

கரோனாவால் மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மனதுக்குள் எழுந்ததால், சில உறவுகளுடன் இருந்த மனக்கசப்புகள் அகன்று, உறவுகள் வலுப்படுத்தப்பட்டதாகவும், சின்னச் சின்ன வாக்குவாதங்களை தவிர்த்ததாகவும் சிலர் கருத்துகளை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com