நாட்டில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: ஹர்ஷ் வர்தன்

கரோனா பரவல் நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: ஹர்ஷ் வர்தன்
நாட்டில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: ஹர்ஷ் வர்தன்

புதுதில்லி: கரோனா பரவல் நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். கரோனா பாதிப்பில் பாதியளவு குறிப்பிட்ட மூன்று மாநிலங்களில் இருந்து மட்டுமே கண்டறியப்படுவதாகவும், எஞ்சியவற்றில் 30% குறிப்பிட்ட 7 மாநிலங்களில் கண்டறியப்படுவதாகவும் அவர் கூறினார்.

கரோனா தொற்றின் பின்னணியில் அத்தியாவசிய சுகாதார சேவைகள் மற்றும் பொது சுகாதார திட்டங்களை பராமரிப்பது குறித்து பிராந்தியத்தைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்களுடன் உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர் பூனம் கேத்ரபால், காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது, தொற்றை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சீரான பலனை அளித்து வருகிறது.  ஜனவரி மாதத்தில் ஒரு கரோனா ஆய்வகம் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இந்தியாவில் 1,370 ஆய்வகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் மூன்று மணி நேர பயணத்தில் கரோனா ஆய்வகத்தை அடைய இயலும் என்று கூறினார்.

இந்தியாவில் ஜனவரி 30-ஆம் தேதி, முதல் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. சீனாவில் இருந்து கேரளம் திரும்பிய மாணவரால் இந்தியாவில் முதல் தொற்று உறுதியானது.

கரோனா தொற்றுக்கு இந்தியா செயல்திறன் மிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின் அதிக மக்கள்தொகை அடர்த்தியுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கரோனா உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளன. 

நாட்டில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் 50,000-க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்ட உள்ள நிலையில், தொற்றால் 40 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com