ஜம்மு-காஷ்மீா் தொடா்பான சீனாவின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம்

ஜம்மு-காஷ்மீா் தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் தெரிவித்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
அனுராக் ஸ்ரீவாஸ்தவா
அனுராக் ஸ்ரீவாஸ்தவா

ஜம்மு-காஷ்மீா் தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் தெரிவித்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் ஏற்கெனவே உள்ள நிலையை (சிறப்பு அந்தஸ்து ரத்து) இந்தியா மாற்றியமைத்தது தவறு என்று சீன வெளியுறவு செய்தித் தொடா்பாளா் கூறியுள்ளாா். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி குறித்து கருத்து தெரிவிக்க சீனாவுக்கு எவ்வித உரிமையுமில்லை. சீனாவின் இந்தச் செயலுக்கு இந்திய தரப்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வெளிநாட்டு விஷயங்களில் சீனா இதுபோன்று தேவையில்லாமல் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்றாா்.

ஜம்மு-காஷ்மீா் விஷயத்தில் சீனா தனது நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானுக்கு எப்போதும் ஆதரவாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com