கேரளத்தில் கனமழை நிலச்சரிவு: உயிரிழப்பு 7-ஆக அதிகரிப்பு

கேரளத்தில் பெய்துவரும் கனமழையால் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.
கேரளத்தில் கனமழை நிலச்சரிவு: உயிரிழப்பு 7-ஆக அதிகரிப்பு
கேரளத்தில் கனமழை நிலச்சரிவு: உயிரிழப்பு 7-ஆக அதிகரிப்பு

இடுக்கி: கேரளத்தில் பெய்துவரும் கனமழையால் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேரளத்தில் பெருது வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. பல பகுதிகளில் தரைப்பாலங்கள் மூழ்கிய நிலையில், ஓரு சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலங்கள் இடிந்து சேதம் அடைந்தன.

இதனிடையே இடுக்கி மாவட்டம் ராஜமாலா குடியிருப்பு பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் 2 பேர் உயிரிழந்தனர். 10 பேர் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கேரள அமைச்சர் எம்.எம். மணி பேசியதாவது, நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையுடன் காவல்துறை, தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.

இரவு நேரங்களிலும் மீட்பு பணிகளை தொடரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையிடம் இருந்து மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர்கள் கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

மேலும் இது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் கூறியதாவது, ராஜமாலா குடியிருப்பு பகுதியில் எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதிகளில் நான்கு தொழிலாளர் மையங்களில் சுமார் 82 பேர் தங்கியிருந்தனர். ஆனால் நிலச்சரிவின்போது எத்தனை பேர் அப்பகுதிகளில் இருந்தனர் என்பது தெரியவில்லை. தொடர் மழையின் காரணமாக வான்வழி மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com