புதிய கல்விக்கொள்கையில் எந்த பாகுபாடும் இல்லை: பிரதமர் மோடி

புதிய கல்விக்கொள்கையில் எந்த பாகுபாடும் இல்லை என கல்விக்கொள்கை குறித்த மாநாட்டில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

புதிய கல்விக்கொள்கையில் எந்த பாகுபாடும் இல்லை என கல்விக்கொள்கை குறித்த மாநாட்டில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

‘தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் மாற்றத்தக்க சீர்திருத்தங்கள்' குறித்து காணொலி வாயிலாக நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதில் புதிய கல்விக் கொள்கை குறித்தும் அதன் கீழ் உயர்கல்வியில் மாற்றப்படும் சீர்திருத்தங்கள் குறித்தும் பேசி வருகிறார். 

அதன்படி, தேசிய கல்வி கொள்கை என்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம். இந்த மாற்றத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பழைய கல்விக் கொள்கையால் எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்கவில்லை. 

மேலும், தேசிய கல்விக் கொள்கையில் எந்த பாகுபாடும் இல்லை. 3 முதல் ஆண்டுகளாக நடத்திய விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் லட்சக்கணக்கான பரிந்துரைகள் குறித்து விவாதித்த பின்னரே முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய கல்வி கொள்கை இன்று நாடு முழுவதும் விவாதிக்கப்படுகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கருத்துக்களைத் தருகிறார்கள். கொள்கையை மதிப்பாய்வு செய்கிறார்கள். இது ஆரோக்கியமான விவாதம். அது எவ்வளவு அதிகமாக விவாதம் செய்யப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக நாட்டின் கல்விமுறைக்கு அது பயனளிக்கும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com