கரோனா பாதிப்பு: திருப்பதி கோவில் அர்ச்சகர் மரணம்

கரோனா பாதிப்பின் காரணமாக திருப்பதி பெருமாள் கோவில் அர்ச்சகர் ஒருவர் மரணமடைந்தார்.
கரோனா பாதிப்பின் காரணமாக திருப்பதி பெருமாள் கோவில் அர்ச்சகர் ஒருவர் மரணமடைந்தார்.
கரோனா பாதிப்பின் காரணமாக திருப்பதி பெருமாள் கோவில் அர்ச்சகர் ஒருவர் மரணமடைந்தார்.

திருப்பதி: கரோனா பாதிப்பின் காரணமாக திருப்பதி பெருமாள் கோவில் அர்ச்சகர் ஒருவர் மரணமடைந்தார்.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி பெருமாள் கோவிலானது கரோனா பாதிப்பின் காரணமாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த மாதம் 11–ஆம் தேதியன்று திறக்கப்பட்டது. அதற்குப் பிறகு இதுவரை அர்ச்சகர்கள் உள்ளிட்ட 170 திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா பாதிப்பின் காரணமாக திருப்பதி பெருமாள் கோவில் அர்ச்சகர் ஒருவர் வியாழனன்று மரணமடைந்தார்.

ஸ்ரீநிவாசாச்சர்யலு (45) என்ற அந்த அர்ச்சகர் திருப்பதியில் இருந்த வேறொரு கோவிலில் இருந்து, பெருமாள் கோவிலுக்கு சமீபத்தில்தான் பணிமாற்றம் செய்யபட்டார். அவருக்கு  இந்த வாரத் துவக்கத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு வியாழனன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார்.

இந்த சம்பவம் அங்கு சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com