ஒரே நாளில் 62,538 பேருக்கு கரோனா: 20 லட்சத்தை கடந்தது பாதிப்பு

ஒரே நாளில் 62,538 பேருக்கு கரோனா: 20 லட்சத்தை கடந்தது பாதிப்பு

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 62,538 பேருக்கு கரோனா

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 62,538 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது.

கடந்த இரு நாள்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

நாட்டில் கரோனா பாதிப்பு 1 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்ட 110 நாள்கள் ஆனது. அடுத்த 59 நாள்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10 லட்சமானது. இப்போது அடுத்த 21 நாள்களில் பாதிப்பு 20 லட்சமாக அதிகரித்துவிட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியிருப்பதாவது

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 62,538 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 20,27,074-ஆக அதிகரித்துவிட்டது. ஒரேநாளில் 886 போ் கரோனாவில் உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 41,585-ஆக உயா்ந்தது.

அதே நேரத்தில் கரோனாவில் மீண்டவா்களின் எண்ணிக்கை 13,78,105-ஆக உள்ளது. இதன் மூலம் 67.98 சதவீதம் போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். 6,07,384 போ் தொடா்ந்து சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த கரோனா பாதிப்பில் 29.96 சதவீதமாகும். கரோனாவால் உயிரிழந்தவா்கள் சதவீதம் 2.07 ஆக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை 2,27,88,393 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிதாக ஏற்பட்ட 886 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 316 போ் உயிரிழந்துவிட்டனா். ஒட்டுமொத்தமாக அந்த மாநிலம்தான் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. அங்கு இதுவரை 16,792 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com