தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்ற காவலர்கள்: மத்தியப் பிரதேசத்தில் கொடூரம்

மத்திய பிரதேசத்தின் பார்வானி காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் இருவர் பூட்டு சாவிக்கடை நடத்தி வந்த நபரை லஞ்சம் தராத காரணத்தால் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்றக் காட்சி சர்சையைக் கிளப்பியுள்ளது.
தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்ற காவலர்கள்
தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்ற காவலர்கள்

மத்திய பிரதேசத்தின் பார்வானி காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் இருவர் பூட்டு சாவிக்கடை நடத்தி வந்த நபரை லஞ்சம் தராத காரணத்தால் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்றக் காட்சி சர்சையைக் கிளப்பியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் பார்வானி மாவட்டத்தில் உள்ள ஒரு புறக்காவல் நிலையத்தின் அருகே பூட்டுக் கடை நடத்தி வருபவர் பிரேம் சிங். இவரை அருகில் உள்ள காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு காவலர்கள் தலைமுடியைப் பிடித்து சாலையில் இழுத்துச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

காவல்துறையினருக்கு லஞ்சம் தர மறுத்ததால் காவலர்கள் தன்னை அடித்து த்லைமுடியைப் பிடித்து சாலையில் இழுத்துச் சென்றதாக பிரேம் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

“பிரேம் சிங் ஏற்கெனவே திருட்டு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று பிரேம் சிங் ஒட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தில் குடிபோதையில் இருந்த நபருடன் வந்துள்ளார். காவலர்கள் அவரைத் தடுக்க முயன்றபோது அவர்களிடம் தகராறு செய்துள்ளார். எனினும், பிரேம்சிங்கை தாக்கிய காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்,” என பர்வானி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிமிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து துணைப்பிரிவு அதிகாரிகள் காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நிமிஷ் அகர்வால் கூறியுள்ளார்.

இந்த காணொலியை மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா சுட்டுரை செய்து காவல்துறையை விமர்சித்துள்ளார். "பிரேம் சிங் கிரந்தி நீண்ட காலமாக புல்சூட் புறக்காவல் நிலையத்தின் அருகே ஒரு பூட்டு சாவி கடையை நடத்தி வருகிறார்.அவர் காவலர்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டுள்ளார்.” எனத் சலுஜா தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com