காசிரங்கா பூங்காவில் கொம்புக்காக வேட்டையாடப்பட்ட காண்டாமிருகம்

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் காண்டாமிருகம் ஒன்று சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

சனிக்கிழமை காலை 11 மணியளவில் காசிரங்கா தேசிய பூங்காவில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் பெண் காண்டாமிருகம் ஒன்று இறந்து கிடந்தது கண்டெடுக்கப்பட்டது.

காண்டாமிருகத்தின் கொம்பு வேட்டையாடுபவர்களால் வெட்டி எடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது. “இது தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.” என காசிரங்கா தேசிய பூங்காவின் வன அலுவலர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த மே மாதம் 9 ஆம் தேதி காசிரங்கா பூங்காவில் வேட்டையாடப்பட்ட காண்டாமிருகம் ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com