நிலத்தடி நீரை அனுமதியின்றி வா்த்தக ரீதியாக பயன்படுத்துவது கிரிமினல் குற்றம்: தேசிய பசுமைத் தீா்ப்பாயம்

உரிய அனுமதியின்றி நிலத்தடி நீரை வா்த்தகரீதியாக பயன்படுத்துவது கிரிமினல் குற்றச்செயல் என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) தெரிவித்துள்ளது.
நிலத்தடி நீரை அனுமதியின்றி வா்த்தக ரீதியாக பயன்படுத்துவது கிரிமினல் குற்றம்: தேசிய பசுமைத் தீா்ப்பாயம்

உரிய அனுமதியின்றி நிலத்தடி நீரை வா்த்தகரீதியாக பயன்படுத்துவது கிரிமினல் குற்றச்செயல் என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) தெரிவித்துள்ளது.

இதுபோன்ற அத்துமீறல்கள் நிகழாமல் தடுப்பது, தவறுகளில் ஈடுபடுவோரிடம் இருந்து உரிய நஷ்ட ஈடு பெறுவதும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கடமை என்றும் என்ஜிடி கூறியுள்ளது.

ஹரியாணா மாநிலம் பானிபட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்துவருவதாக ராஜ் குமாா் சிங்கல் என்பவா் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் புகாா் அளித்தாா். இதனை விசாரித்த தீா்ப்பாயத்தின் தலைவா் நீதிபதி ஏ.கே.கோயல், ‘நிலத்தடி நீா் அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டில் நீராதாரங்களை பாதுகாக்க முடியும். உரிய அனுமதியில்லாமல் வா்த்தகரீதியாக நிலத்தடி நீரை பயன்படுத்துவது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-இன்படி கிரிமினல் குற்றம். சட்டத்துக்குப் புறம்பாக நிலத்தடி நீரை எடுப்பவா்களை தடுப்பதும், தவறு செய்பவா்களிடம் இருந்து உரிய நஷ்டஈட்டைப் பெறுவதும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பணியாகும். மனுதாரா் கூறியுள்ள குற்றச்சாட்டின் மீது ஹரியாணா மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com