நொய்டாவில் 400 படுக்கை வசதியுடன் கரோனா மருத்துவமனை திறப்பு

உத்தரப் பிரதேசத்தின், நொய்டாவில் 400 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா மருத்துவமனையை முதல்வர் யோகி ஆதித்யநாத்  திறந்து வைத்தார்.
UP CM inaugurates 400-bed COVID-19 hospital in Noida
UP CM inaugurates 400-bed COVID-19 hospital in Noida

உத்தரப் பிரதேசத்தின், நொய்டாவில் 400 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா மருத்துவமனையை முதல்வர் யோகி ஆதித்யநாத்  திறந்து வைத்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியது, 

கௌதம் புத்தா நகரில் கரோனாவுக்கு என்று பிரத்யேக மருத்துவமனை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தில்லி காரணமாக கரோனா தொற்று இங்கேயும் பரவியுள்ளது. கௌதம் புத்தா நகர் மற்றும் என்.சி.ஆர் பகுதியில் கரோனா கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. 

ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலை 1, நிலை  2 மருத்துவமனைகள் உள்ளன. அது அடுத்த 10 முதல் 15 நாள்களில் திறக்கப்படும். இன்று, ஒரு மருத்துவமனை திறக்கப்பட்டது. இரண்டாவது மருத்துவமனை இன்னும் 10 முதல் 12 நாட்களில் கோண்டாவில் திறக்கப்படும் என்று கூறியுள்ளார். 

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வருகையை முன்னிட்டு நொய்டாவில் 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com