தில்லியில் புதிதாக 1,404 பேருக்கு கரோனா: 16 பேர் பலி

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,404 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 பேர் உயிரிழந்தனர்.
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சந்தியேந்திர ஜெயின்
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சந்தியேந்திர ஜெயின்

புதுதில்லி: தில்லியில் நேற்று (சனிக்கிழமை) புதிதாக 1,404 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தில்லியிலும் கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இது தொடர்பாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சந்தியேந்திர ஜெயின் கூறியதாவது, வெளியில் இருந்து தில்லிக்கு கரோனா பரிசோதனைக்காக வருபவர்களால் தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. வெளியில் இருந்து வருபவர்களை கணக்கில் இருந்து கழித்தால் தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்தே காணப்படும். 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,404 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,44,127-ஆக அதிகரித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) 1,130 பேர் குணமடைந்தனர். தற்போது 10,668 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 16 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 4,098-ஆக உள்ளது இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com