ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான நிதித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான நிதித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

முன்னதாக, பி.எம். கிசான் எனும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் வீடியோ கான்பரன்சிங் வழியாக ஆறாவது தவணையாக ரூ.17,000 கோடியில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். 

மேலும், 'விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு கடந்த 2018 டிசம்பரில் தொடங்கப்பட்ட பி.எம். கிசான் திட்டத்தின் கீழ், 9.9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 75,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, நேரடியாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் திட்டத்தின்' கீழ் ஆறாவது தவணையாக ரூ.17,000 கோடி உதவித் தொகை, 8.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.

அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்புகள் மற்றும் சேகரிப்பு மையங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த தொகை உதவும். மேலும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு அதிக மதிப்பைப் பெற உதவும். ஏனெனில் விளைபொருள்களை சேமித்து அதிக விலைக்கு விற்க முடியும், பல கடன் வழங்கும் நிறுவனங்களில் இத்திட்டத்தின் கீழ் ரூ .1 லட்சம் கோடி பெற முடியும்' என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com