உள்நாட்டு விமான சேவை: 50 லட்சம் பேர் பயணம்

கரோனாவால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள உள்நாட்டு பயணிகள் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த வீடு திரும்பியதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல் தெரிவித்துள்ளார். 
விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

கரோனா பொதுமுடக்க காலத்தில் உள்நாட்டு பயணிகள் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர் திரும்பியதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல் தெரிவித்துள்ளார். 

கடந்த மே 25 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 9 வரை மட்டும் நாடு முழுவதும் மொத்தமாக 56,792 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 9 அன்று மட்டும் 911 விமானங்களில் 93,062 பேர் பயணித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் கரோனா பரவல் காரணமாக அனைத்து வகையான விமானப் போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் கடந்த மே 25 முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com