பைலட் எழுப்பிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண குழு அமைக்கப்படும்: காங்கிரஸ்

​சச்சின் பைலட் எழுப்பிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண 3 பேர் கொண்ட குழுவை அமைக்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
​சச்சின் பைலட் எழுப்பிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண 3 பேர் கொண்ட குழுவை அமைக்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)
​சச்சின் பைலட் எழுப்பிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண 3 பேர் கொண்ட குழுவை அமைக்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)


சச்சின் பைலட் எழுப்பிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண 3 பேர் கொண்ட குழுவை அமைக்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த சச்சின் பைலட், தனது குறைகளை விரிவாக எடுத்துரைத்தார். அவர்கள் வெளிப்படையான, உறுதியான ஆலோசனையை மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சி மற்றும் ராஜஸ்தானிலுள்ள காங்கிரஸ் அரசின் நலனுக்காகப் பணியாற்ற சச்சின் பைலட் உறுதிபூண்டுள்ளார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்எல்ஏ எழுப்பிய பிரச்னைகளுக்கு சரியான தீர்வைக் காண 3 பேர் அடங்கிய குழுவை அமைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்." என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் முதல்வர் அசோக் கெலாட் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் மற்றும் துணை முதல்வர் பதவிகளிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக 18 எம்எல்ஏ-க்கள் இருந்தனர். இதன் காரணமாக, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் விரும்பினார். இதைத் தொடர்ந்து, வரும் 14-ம் தேதி ராஜஸ்தான் பேரவை கூடுகிறது. 

இந்த நிலையில், சச்சின் பைலட் சமரசம் ஆகியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com