வென்டிலேட்டர் தேவையில்லை: கரோனா சிகிச்சை முறையில் பெரிய மாற்றம்

கரோனா பாதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு இனி முதல் வாய்ப்பாக வென்டிலேட்டர் பொருத்தப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
வென்டிலேட்டர் தேவையில்லை: கரோனா சிகிச்சை முறையில் பெரிய மாற்றம்
வென்டிலேட்டர் தேவையில்லை: கரோனா சிகிச்சை முறையில் பெரிய மாற்றம்


புது தில்லி: கரோனா பாதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு இனி முதல் வாய்ப்பாக வென்டிலேட்டர் பொருத்தப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதுமே, நாட்டில் இருக்கும் வென்டிலேட்டர் வசதிகள் குறித்துத்தான் அலசப்பட்டது. அதற்குக் காரணம், கரோனா பாதித்து மூச்சு விடுவதில் சிரமத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டதே காரணம்.

ஆனால் கரோனா தொற்றுக்கு எதிரான சிகிச்சையில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை முறைகளில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் கரோனா பாதித்து மிகவும் அபாயகட்டத்துடன் குறைந்த ஆக்ஸிஜன் எடுப்புத் திறனுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அது பெரும்பாலும் பலனளிக்காது என்பதையே மருத்துவர்கள் தொடர்ந்து அறிந்துகொண்டனர்.

அதற்கு மாற்றாக மூச்சு விடுவதில் சிரமத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஆக்ஸிஜன் சேவையை தற்போது மருத்துவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதுமே, நாடு முழுவதும் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரிக்கத் தொடங்கியது. இதற்காக மிகக் குறைந்த விலையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 18 ஆயிரம் வென்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. அவற்றில் பல வென்டிலேட்டர்கள் இன்னமும் பயன்படுத்தாமலேயே உள்ளது. அதற்குள் கரோனா பற்றிய புரிதலில் மாற்றம் ஏற்பட்டு, தற்போது கரோனா சிகிச்சைக்கு வென்டிலேட்டர்களின் தேவையே இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறையின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரில் 0.3% பேருக்கு மட்டுமே வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

வென்டிலேட்டர்கள் இல்லாமல், தீவிர சிகிச்சைப் பிரிவில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை கண்டறியப்பட்டுவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதனை மேலும் உறுதி செய்யும் வகையில், மும்பையைச் சேர்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கூறுகையில், நியூ யார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், கரோனா நோயாளிகளில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டவர்களில் 80% குணமடையவில்லை என்ற தகவல் கிடைத்திருப்பதாகவும், ஆக்ஸிஜன் சிகிச்சையே பலனளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com