கரோனா: தமிழகம் உள்பட 10 மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனை

கரோனா நோய்த்தொற்று தொடா்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, தமிழகம் உள்பட 10 மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்துகிறாா்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சென்னை: கரோனா நோய்த்தொற்று தொடா்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, தமிழகம் உள்பட 10 மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்துகிறாா்.

காணொலிக் காட்சி வழியாக காலை 10.30 மணி முதல் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆந்திரம், பிகாா், குஜராத், கா்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்தவுள்ளாா்.

பணியில் ஈடுபட்டுள்ளோா்: ஒவ்வொரு மாநிலத்திலும் கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுடன் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பிரதமா் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று தொடா்பாக சில முக்கிய அறிவிப்புகளை சுதந்திர தினத்தை ஒட்டி மத்திய அரசு வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மத்திய அரசு, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பொது முடக்கத்தில் மேலும் எத்தகைய தளா்வுகளை அளிக்கலாம், பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து 10 மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் தமிழக முதல்வா் கே.பழனிசாமி, மாநிலத்தின் சாா்பாக சில முக்கிய கோரிக்கைகளை வைக்கவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com