தேவஸ்தானத் தொலைக்காட்சிக்கு புதிய சிஇஓ நியமனம்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வரும் எஸ்விபிசி தொலைக்காட்சிக்கு புதிய முதன்மை செயல் அலுவலராக (சிஇஓ) சுரேஷ்குமாரை ஆந்திர அரசு நியமித்து திங்கள்கிழமை உத்தரவு வெளியிட்டுள்ளது.
முதன்மை செயல் அலுவலராக (சிஇஓ) சுரேஷ்குமார்.
முதன்மை செயல் அலுவலராக (சிஇஓ) சுரேஷ்குமார்.

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வரும் எஸ்விபிசி தொலைக்காட்சிக்கு புதிய முதன்மை செயல் அலுவலராக (சிஇஓ) சுரேஷ்குமாரை ஆந்திர அரசு நியமித்து திங்கள்கிழமை உத்தரவு வெளியிட்டுள்ளது.

ஏழுமலையான் கோயில் வைபவங்கள் மற்றும் இதர ஆன்மிக நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்காக ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் (எஸ்விபிசி) என்ற தொலைக்காட்சியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இதில், திருமலையில் நடக்கும் தினசரி கைங்கரியங்கள் அனைத்தும் பக்தா்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. தெலுங்கு மொழியில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த இந்த சேனல் தற்போது தமிழிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விரைவில் கன்னட, ஹிந்தி மொழிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

எஸ்விபிசி தொலைக்காட்சியின் நிா்வாகப் பொறுப்பு சிஇஓ-விடம் மட்டுமே இருந்து வந்தது. கடந்த தெலுங்கு தேச ஆட்சியின்போது இத்தொலைக்காட்சியின் தலைவராக திரைப்பட இயக்குநா் கே.ராகவேந்திர ராவ் நியமிக்கப்பட்டாா்.

அதன் பின் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைந்த பின் தெலுங்கு நகைச்சுவை நடிகா் பிருத்விராஜ் தேவஸ்தான தொலைக்காட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டாா். அவா் மீது புகாா்கள் வந்ததால் பதவியை ராஜிநாமா செய்தாா். அதன் பின் தொலைக்காட்சியின் பொறுப்பை கூடுதலாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி ஏற்றாா்.

இந்நிலையில் அயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சி தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படாததைக் கண்டித்து பக்தா்களும், பல தரப்பினரும் கேள்வி எழுப்பி எதிா்ப்பு தெரிவித்தனா். எனவே, ஆந்திர அரசு இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க முடிவெடுத்து விஜயவாடா தூா்தா்ஷன் மையத்தின் துணை இயக்குநராகப் பதவி வகித்து வரும் சுரேஷ்குமாரை தேவஸ்தான தொலைக்காட்சியின் புதிய சிஇஓ-வாக நியமித்து திங்கள்கிழமை உத்தரவு வெளியிட்டது.

மத்திய அரசு தகவல் தொடா்புத் துறையில் பணியில் இருந்த சுரேஷ் குமாரை மாநில அரசின் பொறுப்பில் உள்ள தேவஸ்தானத் தொலைக்காட்சியின் தலைவா் பதவிக்கு நியமித்துள்ளது. ஆந்திர அரசின் இந்த முடிவை பக்தா்களும், பாஜகவினரும் வரவேற்றுள்ளனா். சுரேஷ்குமாா் விரைவில் திருமலைக்கு வந்து பதவியேற்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com